
மீண்டும் முதல்வர் ஆகும் ஆசையில் ராஜசியாமள யாகம் நடத்தும் சந்திரசேகர ராவ்!
தெலுங்கானா மாநிலத்தில் தற்போது முதல்வராக இருக்கும் சந்திரசேகர ராவ் 2014 முதல் முதல்வராக பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து 3-வது முறையாகவும் முதல்வர் ஆக வேண்டி ராஜசியாமள யாகம் தொடங்கினார் சந்திரசேகர ராவ்.
ஆனால், காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியுள்ளது. தெலங்கானா மாநிலம் உருவான கடந்த 2014 முதல் தற்போது வரை தொடர்ந்து 2 முறையாக சந்திரசேகர ராவ் முதல்வராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் 3-வது முறையாக ஹாட்ரிக் சாதனை படைத்து முதல்வராக வரவேண்டும் என்பதே சந்திரசேகரராவின் லட்சியமாக உள்ளது.
இதற்காக சந்திரசேகரராவ் சித்திபேட்டை மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தம்பதி சமேதராக ராஜசியாமள யாகத்தை தொடங்கி உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது கட்சியினர் இரு தெலுங்கு மாநிலங்களும் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடையவே இந்த யாகம் நடத்தப்படுவதாக கூறியுள்ளனர்.
இந்த யாகத்தில் விசாகப்பட் டினத்தில் உள்ள சாரதா பீடாதிபதியான ஸ்வரூபானந்த சுவாமிகளின் தலைமை தாங்கினார். இதற்காக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து வேத பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

