எம்.ஆர். விஜயபாஸ்கர் கட்சியை வளர்க்கவில்லை, தன்னை வளர்த்துக்கொண்டார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கரூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, எம்.ஆர். விஜயபாஸ்கர் போன பிறகு அதிமுக அழிந்துவிடும் என்று சிலர் நினைத்ததாகவும், ஆனால் அவர் போன பிறகுதான் இவ்வளவு பேர் இங்கு கூடியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன்பிருந்த செந்தில்பாலாஜி, எம்.ஆர். விஜயபாஸ்கரால் தான் அதிமுகவில் இருந்து வெளியே போனதானக் குற்றம் சாட்டினார். பிறகு செந்தில்பாலாஜி சேராத இடத்தில் சேர்ந்துவிட்டதாகவும், ஆனால் செந்தில்பாலாஜி போன இடத்திற்கு இன்னும் விசுவாசமாக இருப்பதாகவும் கூறினார்.
விஜயபாஸ்கர் கட்சியை வளர்க்கவில்லை, தன்னை வளர்த்துக்கொண்டார் என்று குற்றம் சாட்டினார். மேலும் தற்போது அவர் அதிகாரத்துக்காக தவெகவில் இணைந்திருப்பதாகக் கூறினார். ஆனால் தவெகவில் சேர்ந்த விஜயபாஸ்கரை ஒருவராவது மதிக்கிறார்களா? என்று வினவியுள்ளார்..



