இஸ்ரேலில் அமையவுள்ள தேசிய ஒற்றுமை அரசின் தொடக்கக் காலத்தில், தான் மாற்றுப் பிரதமராகப் பணியாற்றத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது சமூக வலைத் தளப் பதிவில், இஸ்ரேலில் அமையவுள்ள தேசிய ஒற்றுமை அரசின் தொடக்கக் காலத்தில், தான் மாற்றுப் பிரதமராகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளளார். அதிக வாக்குகளைப் பெறும் கட்சியின் தலைவரே ஆட்சியமைக்க வேண்டும் என்ற வழக்கமான கொள்கையைத் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
ஐசன்கோட்டின் ‘யஷார்’ கட்சியை விட, நெதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சி சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்த நிலையில் இந்த முன்மொழிவு வைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய யஷார்’ கட்சியின் தலைவர் ஐசன்கோட் , ஒற்றுமை அரசுப் பேச்சுவார்த்தைகளை லிகுட் கட்சி வேண்டுமென்றே தாமதப்படுத்தி, எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தி புதிய தேர்தலை நடத்த முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, அரபுக் கட்சிகளுடன் மாற்றுக் கூட்டணி அமைக்க ஐசன்கோட் முயற்சிப்பதாக லிகுட் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

