சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில், இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது, சென்னை வந்த ராகுல் காந்தியை மு.க.ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார்.
நாடாளுமன்றத்தில் நாளை பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறிப்பாக, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு கோரியதாகக் கூறப்படும் நிலையில், அந்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்துவது தொடர்பாக இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ள நிலையில், இந்த ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.


