தொகுதி மறுவரையறை சட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியா கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, திமுக தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை ஆதரித்தால் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுவிடும் என்கிற ஒரு சூழல் உருவாகும் என்று எச்சரித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
தொகுதி எண்ணிக்கை பெருகுவதன் மூலம் பாஜக தங்களுக்கு செல்வாக்குள்ள மாநிலங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும் வகையில் கணக்கு போடுவதாகத் தெரிவித்தார். இந்த சட்ட மசோதா தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் வேண்டுகோளாக உள்ளது என்றார்.
திருப்பரங்குன்ற தீப தூண் விவகாரத்தில் அடாவடியான ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பதாகக் கூறினார்


