Theni: அம்பேத்கர் சிலை முன்பு தாய், மகள் தீக்குளிப்பு!

Advertisements

காவல்துறையினர் மிரட்டுவதாகக் கூறி அம்பேத்கர் சிலை முன்பு தாய், மகள் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகநாதன். இவரது  மனைவி 35 வயதான துளசி.இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை உள்ளது.
அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

எனவே இவர்களது வீட்டிற்கு முன்பு செல்லக்கூடிய மின்சார வயர் தாழ்வாகச் செல்வதால் அருகில் உள்ள மரத்தின் மீது உரசி அவ்வப்போது மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் மின்வாரிய ஊழியர்களிடம் சண்முகநாதன் மற்றும் அவரது மனைவி துளசி ஆகியோர் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்களான லூக்காஸ், குமார் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்வீர்களா என்று கூறி சண்முகநாதன் என்பவரைத் தாக்கியுள்ளனர்.இதில் காயம் அடைந்தசண்முகநாதன்பெரியகுளம்அரசுமாவட்டதலைமைமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் சண்முகநாதனின் மனைவி துளசி லூக்காஸ் மற்றும் குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டித் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அதே போன்று லூகாஸ் மற்றும் குமார் ஆகியோர் தரப்பினரும் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இரு தரப்பினரையும் தென்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். துளசி என்பவரது உறவினரான சிறுவன் ஒருவர் பெயரிலும் சேர்த்து வழக்குப் பதிவு செய்வோம் என்று கூறி தென்கரை காவல்துறையினர் மிரட்டியதாகக் கூறி இன்று காலைச் சுமார் 8 மணி அளவில் பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை முன்பு சண்முகநாதன் என்பவரது மனைவி துளசி மற்றும் அவர்களது மகள் ஆகிய இருவரும் தென்கரை காவல்துறையினர் ஒருதலை பட்சமாகப் பேசி மிரட்டுவதாகக் கூறி மண்ணெண்ணெய் கேனை கையில் வைத்துத் தனக்குத் தானே ஊற்றித் தீக்குளிக்க முற்பட்டனர்.

இந்தத் தகவல் அறிந்த பெரியகுளம் வடகரை காவல்துறையினர் துளசியிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தாய் மகள் இருவர் மீதும் தண்ணீர் ஊற்றிப் பெரியகுளம் காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தென்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *