Morne Morkel:இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகத் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் நியமனம்!

Advertisements

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகத் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்திய மண்ணில் நடைபெறும் இந்தத் தொடர் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்குகிறது. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகக் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப்பும், உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட்டும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகத் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலைப் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

செப்டம்பர் 1-ந்தேதி முதல் மோர்னே மோர்கல் தனது பயிற்சி அளிக்கும் பணியைத் தொடங்க உள்ளார். ஐ.பி.எல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராகக் கம்பீர் செயல்பட்டபோது மோர்னே மோர்கல் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *