செருப்பு காலுடன் உணவகத்திற்குள் புகுந்த தமது உதவியாளரை செருப்பை கழற்றி விட்டு உள்ளே வா என எம்எல்ஏ கணபதி கண்டித்தார்.
சென்னை: மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் முறையாக நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது என அப்பகுதி எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி கடை கடையாக சென்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது 144 வார்டு பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்க்கு உள்ளே சென்று ஆய்வு செய்ய சென்றார்.

அப்போது அவர் உள்ளே செல்வதற்கு முன்னதாக அவரது உதவியாளர் செல்வம் என்பவர் செருப்பு காலுடன் உள்ளே சென்று அவரை செல்போனில் புகைப்படம் எடுக்க சென்றார். செருப்பு காலுடன் சென்ற உதவியாளரை எம். எல். ஏ உடனடியாக வெளியே வா செருப்பை அவிழ்த்து விட்டு உள்ளே வரக்கூறி கடிந்து கொண்டார்.
பின்னர் உதவியாளர் வெளிய வந்து செருப்பை அவிழ்த்துவிட்டு உள்ளே சென்றார். பின்னர் எம்எல்ஏ உணவு தரம் குறித்து ஆய்வு செய்து அம்மா உணவகத்தில் டீ அருந்திவிட்டு மற்ற கடைகளுக்கு கிளம்பிச் சென்றார். அம்மா உணவகத்தில் செருப்பு காலுடன் சென்ற உதவியாளரை திமுக எம்எல்ஏ செருப்பை அவிழ்த்துவிட்டு உள்ளே வர அழைத்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.


