
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தனது தவவாழ்வின் மூலம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் இன்றும், என்றும் குடியிருக்கும் உன்னதத் தாய், தமிழ்நாட்டின் மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் வகையில் தனது மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால் “அம்மா” என அன்புடன் அழைக்கப்படும் நம் ஒப்பற்ற தலைவி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்த நாளில்,
நம் உயிரின் அன்பு தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெருமையைப் போற்றி வணங்குகிறேன்.
“எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்” என நம் இதயதெய்வம் அம்மா கூறிய அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்த நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.



