
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் ஆலயத்தில் மார்கழி மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.
உலக புகழ் பெற்ற சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் வருடத்திற்கு இரண்டு முறை திருவிழா நடைபெறும் ஒன்று ஆணிதிருமஞ்சனம் மற்றொன்று மார்கழி ஆருத்ரா தரிசனம். இந்த விழாவானது பத்து நாட்கள் சிதம்பரத்தில் நடைபெறுவதால் சிதம்பரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்தநிலையில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று காலை சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர இசையுடன் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் நேர் எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்களின் மந்திரத்துடன் இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றம் நடைபெறும் பொழுது சிவாய நமஹ சிவாய நமக என்று பொதுமக்கள் கோஷங்களை எழுப்பி நடராஜப் பெருமானை வழிபட்டார்கள்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். வருகின்ற 26 ஆம் தேதி தேர் திருவிழாவும் 27ஆம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஏராளமான பக்தர்கள் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.




