அமெரிக்கா தான் உருவாக்கியுள்ள இக்கட்டான சூழலிலிருந்து விடுபட ஈரானின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என ஈரானின் உயரிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா- ஈரான் இடையிலான கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டன. இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து இருத்தரப்பினரும் மீண்டும் தாக்குதலை அதிகரித்துள்ளன. இதற்கிடையே ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிக்குழு சவுதி அரேபியாவை தாக்க தொடங்கியுள்ளது.
அமெரிக்கா- ஈரான் இடையில் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்பட்டால்தான் மத்திய கிழக்கு பகுதியில அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஈரானின் உயரிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், அமெரிக்கா தான் உருவாக்கியுள்ள இக்கட்டான சூழலிலிருந்து விடுபட விரும்பினால், ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றாலும் நிபந்தனைகள் முன்வைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.



