கடலூரில் புதிய சிப்காட், என்.எல்.சி. கூடுதல் நிலங்களை கையகப்படுத்தும் திட்டங்களை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக ஏற்கனவே அறிக்கை செய்யப்பட்ட 1097 ஏக்கருடன் மேலும் 164 ஏக்கர் நிலங்களையும், என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்துவதற்கான அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் சிப்காட் வளாகங்களையும், நிலக்கரி சுரங்கங்களையும் திணிப்பதும், நிலங்களைப் பறிப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள இரசாயன ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தும் மாசுபடும் என்று கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கும் திட்டம், என்.எல்.சி சுரங்கம் 1, 1ஏ விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவற்றையும், அவற்றுக்காக மொத்தம் 1277 ஏக்கர் நிலங்களை கையகப் படுத்துவதற்கான அறிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இல்லாவிட்டால் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


