
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ரெட் கலர் மாடர்ன் உடையில் நடத்திய கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், டாக்டருக்குப் படித்து முடித்ததும் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.
முதல் படத்திலேயே நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் முத்தையா இயக்கிய விருமன் படம்மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் அதிதி.
விருமன் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அதிதிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மாவீரன் திரைப்படம். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி ஷங்கர்.
விருமன், மாவீரன் என இரண்டு மாஸ் ஹிட் படங்களைக் கொடுத்த அதிதி ஷங்கர் அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இதில் அதிதிக்கு ஜோடியாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கிறார்.
இதுதவிர பாடல்கள் பாடுவதிலும் அதிகளவில் ஆர்வம் கொண்ட அதிதி, தமிழில் யுவன் இசையில் வெளிவந்த மதுர வீரன் என்கிற பாடலைப் பாடி இருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை அதிதி ஷங்கர் ரெட் கலர் மாடர்ன் உடை அணிந்தபடி விதவிதமாகப் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அந்த மாடர்ன் ஆடையில் ரெட் கலர் ரோஸ் போல் செம கியூட்டாக இருப்பதாக அதிதியின் அழகை நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
![]()

