மு.க.ஸ்டாலின் மனுத் தாக்கல்..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடச் சென்னை கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்தே 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளார். நான்காம் முறையாக இந்தத் தேர்தலிலும் அவர் போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபின் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சென்றனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களைப் பார்த்து ஸ்டாலின் கையசைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *