Cauvery Issue : தமிழக அரசுக்கு திருமாவளவன் அதிரடி கோரிக்கை..!

காவிரி நீர் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் முதுநகரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், மண்டல செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறும் தமிழ் தேசிய மாநாடு, மாநில சுயாட்சி, மொழியுரிமை மற்றும் தேசிய இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நோக்கில் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்றும், மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்பதாகவும் கூறினார். காவிரி நீர் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய அவர், திட்டங்களின் பெயர் மாற்றம் அரசுகளில் வழக்கமான நடைமுறை என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *