Mitshi CFO Resignation: பள்ளி நோட் பேப்பரில் ராஜினாமா?

Advertisements

கோடு போட்ட பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் நோட்புக் தாளில் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய அதிகாரியின் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் மிஸ்தி இந்தியா லிமிடெட். ரூ.19 கோடி மதிப்புள்ள இந்நிறுவனத்தில் ரிங்கு படேல் பொருளாதார அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவர் ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி தனது நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார். அவரது ராஜினாமா கடிதம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.ரிங்கு படேல் தனது ராஜினாமா கடிதத்தை கடந்த மாதம் 15-ம் தேதி எழுதி அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் சொந்தக் காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.

தனது மகனின் நோட்புக்கில் இரண்டு பத்திகளில் மிகச் சாதாரணமாக பள்ளி மாணவர்கள் விடுமுறை விண்ணப்பம் எழுத்டுவது போல் எழுதி சிறு பிள்ளைகள் போன்று, அதுவும் ஒரு பெரிய நிறுவனத்துக்கு தனது ராஜினாமாவை, பெரிய பதவி வகித்த ரிங்கு பட்டேல்  அனுப்பியுள்ளார். மிர்ஷி இந்தியா நிறுவனத்தின் நிதி கையாளும் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அவர் தனது பணியிலிருந்து விலகுவதற்காக , ராஜினாமா கடிதத்தை கடந்த டிசம்பர்  மாதம் 15- ஆம் தேதி கொடுத்தார்.

இ-மெயில் அனுப்புவது தான் முறை. ஆனால் பள்ளி நோட்புக் பேப்பரை பயன்படுத்தி, அனுப்பியிருப்பது வேடிக்கையாக உள்ளது .. அதில் மிக எளிமையாக ராஜினாமா குறித்த விஷயத்தை தெரிவித்து, போட்டோ எடுத்து அனுப்பி வைத்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்றுக் கொண்டது. கடிதம் செம வைரல்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *