
ஆசிரியர் நாளையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனின் உருவப்படத்துக்குத் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
உத்தரக்கண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது அலுவலகத்தில் இராதாகிருஷ்ணன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உத்தரப் பிரதேசத்தின் மொரதாபாத்தில் ஆசிரியர் நாளையொட்டிப் பள்ளியின் விளையாட்டுத் திடலில் மிகப்பெரிய அளவில் இராதாகிருஷ்ணனின் படத்தை மாணவர்கள் வரைந்தனர்.
ஒடிசா மாநிலம் பூரிக் கடற்கரையில் ஆசிரியர் நாளையொட்டிப் புகழ் பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், இராதாகிருஷ்ணனின் படத்தை மணலில் செதுக்கியும் வரைந்தும் உள்ளார்.


