Anurag Thakur: கிண்டல் செய்த ராகுல் மீது கண்டனம்!

நாடாளுமன்றத்தில் கடந்த சில தினங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர், பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், மத்திய மந்திரி அனுராக் தாக்குர் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ராகுல் காந்தி முதிர்ச்சி அற்றவர், தீவிரம் காட்டாதவர், ஜனநாயகமற்றவர். வீட்டிலோ அல்லது வெளியிலோ எதுவாக இருந்தாலும், இது வெட்கக்கேடான செயல் , அநாகரீகமானது என்று தெரிவித்தார். ஒன்றல்ல , இரண்டல்ல  எத்தனையோ முறை பிரதமரை அவரது செயலாலோ, பேச்சாலோ  விமர்சித்துள்ளார். ராகுல் காந்தியின் அநாகரிகமான செயலை நாடு மன்னிக்காது  என்று கண்டனம் செய்தார்.

ஒரு எம்.பி. தவறான செயலில் ஈடுபட்டிருந்தால், அவருடன் இணைவதை தவிர்க்க வேண்டும் அதை விடுத்து மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டு வைப்பது சரியல்ல என்று தெரிவித்தார்.  வெட்கக்கேடான செயல் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *