மேலாடையை கழற்றிய அழகிகள்!

Advertisements

Miss Universe | Indonesia | Contestant | allege sexual abuse | Jakarta

மிஸ் யுனிவர்ஸ் போட்டியின்போது 20 பேர் முன்னிலையில் மேலாடையின்றி இருக்க சொன்னதாக 6 நாட்டு அழகிகள் புகார் அளித்து உள்ளனர்…

ஜகார்தா : இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 ந்தேதி வரை மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. 3, ஆண்கள் உட்பட 20 பேருக்கு மேல் உள்ள அறையில் உடல் பரிசோதனை என்ற பெயரில் மேலாடையின்றி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக 6 போட்டியாளர்கள் குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்து உள்ளனர். ஆகஸ்ட் 3 ஆம் தேதி இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு “உடல் சோதனை” மற்றும் புகைப்படங்களுக்காகப் போட்டியாளர்கள் தங்கள் மேலாடைகளை கழற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்று அவர்களின் வழக்கறிஞர் ஒருவர் கூறி உள்ளார்.

போட்டி அமைப்பாளர்கள், போட்டியாளர்களின் உடலில் ஏதேனும் தழும்புகள், செல்லுலைட் அல்லது பச்சை குத்தப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறியதாகக் கூறப்படுகிறது.இது என்னை மனரீதியாகப் பாதித்துள்ளது. இதனால் என்னால் தூங்க முடியவில்லை என்று அழகி ஒருவர் கூறி உள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி அவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க ஒளிபரப்பும்போது அவர்களின் முகங்களை மங்கலாக்கியது.

Miss Universe | Indonesia | Contestant | allege sexual abuse | Jakarta

தலைநகர் ஜகார்தாவில் உள்ள போலீசார் மேலும் விசாரணை நடத்துவதாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா அமைப்புக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் என்று அதன் உரிமையாளர் பாப்பி கபெல்லா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் அமைப்பும் இந்த விஷயத்தைக் கவனித்து வருவதாகவும், பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை “மிகவும் தீவிரமாக” எடுத்துக் கொள்வதாகவும் கூறி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *