டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை வீழ்த்தியது போல், தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம் – அமித்ஷா

Advertisements

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை வீழ்த்தியது போல், தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம் என்று மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க.கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, மதுரை மண்ணில் மீனாட்சி அம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன் என்று தெரிவித்தார். மேலும், ஜூன் 22-ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி தர வேண்டும் எனவும், தமிழ்நாட்டிற்கு வந்து உங்களிடம் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்பதில் வருத்தம் ஏற்படுகிறது என்றும், அமித்ஷாவால் எங்களை தோற்கடிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார்.

ஆனால், தமிழக மக்கள் அவர்களை தோற்கடிப்பர்கள் எனவும், 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க- பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், வரும் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை வீழத்தியது போல், தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம் என்றும்,ஆபரேஷன் சிந்தூருக்கு, தமிழகத்திலிருந்து வந்த ஆதரவு குரல் என்றும் மறக்க முடியாதது என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *