அப்டேட் கேட்டுக் கிரிக்கெட் மைதானத்தை அலற விட்ட ரசிகர்கள்!

Advertisements

Vidaamuyarchi Movie | Guyana | Providence Stadium | AK62 | Fan | LIVE Update | India vs West Indies T20 | Ajith Kumar

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் கேட்டு அலப்பறை செய்துள்ளனர்...

வலிமை அப்டேட்டை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி யாருமே மறந்திருக்க முடியாது. அப்படத்திற்கான அப்டேட்டை வெளியிடாததால், உள்ளூர் தேர்தல் பிரச்சாரம் முதல், சர்வதேச கிரிக்கெட் போட்டிவரை செல்லும் இடமெல்லாம் அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த அலப்பறையை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

வலிமைக்கு பின்னர் உஷாரான அஜித், துணிவு படத்துக்கு அடுத்தடுத்து அப்டேட்டுகளை விட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். இதேபோல் அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சிக்கும் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் விரக்தி அடைந்த ரசிகர்கள், வலிமை படத்தின்போது செய்த சேட்டைகளை மீண்டும் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.

Vidaamuyarchi Movie | Guyana | Providence Stadium | AK62 | Fan | LIVE Update | India vs West Indies T20 | Ajith Kumar

அதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், நேற்று மூன்றாவது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் போட்டியைக் காண மைதானத்திற்கு வந்திருந்த அஜித் ரசிகர் ஒருவர், ஏகே 62 படமான விடாமுயற்சி அப்டேட் வேண்டும் எனக் கேட்டுப் பதாகைகளை கொண்டி வந்திருந்தது டிவியில் ஒளிபரப்பானது. அந்த ரசிகர் கையில் பதாகையுடன் இருக்கும் ஸ்கிரீன் ஷாட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றனர். இதன்மூலம் அஜித் ரசிகர்கள் மீண்டும் அப்டேட் அலப்பறையை தொடங்கி உள்ளது தெரிகிறது. இன்னும் என்னென்னவெல்லாம் செய்யப்போகிறார்களோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *