“தமிழ்நாட்டில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பே இல்லை” – எம்.பி. கனிமொழி விமர்சனம்!

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டதாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தையும் அவரது 5 வயது மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும், தவெக அரசு, முன்விரோதம் காரணமாகத் தொடரும் இப்பிரச்சனையில் மெத்தனமாக செயல்படாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து,  அப்பகுதியில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *