
அரசு திட்டங்களை ஆய்வு செய்ய ஆளுநரை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மட்டுமே ஆய்வு செய்யலாம். ஆனால், எந்தவித அதிகாரமும் இல்லாமல் ஆளுநர் இங்கு வந்து எந்தவொரு திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை என்று தெரிவித்தார். அதை இந்த அரசு என்றைக்கும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, எங்கையாவது தேவையில்லாமல் அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் வந்து ஆய்வு செய்வேன் என்று தலையிட்டால் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்படும் என்று கூறினார். மேலும், கண்டிப்பாக எந்த அதிகாரியும் அரசின் அனுமதி இல்லாமல் ஆளுநருக்கு ஒத்துழைப்பு கொடுக்கக்கூடாது என்று தெரிவித்தார்.




