கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்த அலெக்ஸ் கேரி!

Advertisements

காலே:

ஆஸ்திரேலியா-இலங்கை இடையேயான 2- வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது.

இலங்கை முதல் இன்னிங்சில் 257 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 414 ரன்கள் குவித்தது.

கேப்டன் ஸ்டீவ் சுமித், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திச் சதம் அடித்தனர்.

ஸ்டீவ் சுமித் 131 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்), அலெக்ஸ் கேரி 156 ரன்னும்(15 பவுண்டரி, 2 சிக்சர்)) எடுத்தனர்.

156 ரன்கள் குவித்ததன் மூலம் ஆசியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அலெக்ஸ்கேரி முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பு இலங்கை, வங்காளதேசத்துக்கு எதிராகக் கில்கிறிஸ்ட் 144 ரன்கள் எடுத்திருந்ததே ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஒருவரால் டெஸ்ட் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது.

அந்தச் சாதனையைத் தற்போது அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *