அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் அரசியல் சம்பந்தமாக பேச வேண்டாம் என அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே செரப்பணஞ்சேரியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு தன்னிலைக் கற்றல் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு தன்னிலைக் கற்றல் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தன்னிலை கற்றல் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதாகவும், இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் அரசியல் சம்பந்தமாக பேச வேண்டாம் என செய்தியாளர்களைக் கேட்டுக் கொண்டார்.


