மணல் குவாரி முறைகேடு சர்ச்சை : துரைமுருகன் மீது DVAC வழக்கு..!

மணற்கொள்ளையால் தமிழ்நாடு அரசுக்கு 1427 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது..

திமுக ஆட்சியில் நீர்வளம், கனிமவத்துறை அமைச்சராகத் துரைமுருகன் இருந்தபோது தமிழ்நாட்டின் பல்வேறு ஆறுகளில் உள்ள மணல் குவாரிகளில் மத்திய அரசின் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அப்போது 4700 கோடி ரூபாய் அளவுக்கு மணற்கொள்ளை நடந்துள்ளதாகக் கண்டறிந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரித் தமிழகத் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர், இலஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோருக்குச் சான்றுகளுடன் கடிதம் எழுதியது.

திமுக ஆட்சியில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மணற்கொள்ளை தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மணற்கொள்ளையால் அரசுக்கு 1427 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *