வெலிங்டன் நகரில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில், இந்திய அணி முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் வெலிங்டன் நகரில் உள்ள ஹென்றி மைதானத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான வீரர்களும், நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இன்றையப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்குமா? என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.




