
பாஜக ஆட்சியில் தாய்நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் தாரில் நடைபெற்ற விழாவில் பழங்குடியின மக்கள் செய்த கைவினைப் பொருட்களைப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பரிசாக வழங்கினர்.
மத்தியப் பிரதேசத்தின் தார் என்னுமிடத்தில் மகளிருக்கான மருத்துவ முகாமைப் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
மகளிர் நலத்திட்டத்துக்கான நிதியுதவியை அவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்துவதையும் பிரதமர் தொடக்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தின் தாரில் 2150 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தாய்நாட்டின் பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். பகல்காம் தாக்குதலில் நமது உடன்பிறந்தாளின், மகள்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளின் முகாம்களை, ஆப்பரேசன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையால் தாக்கி அழித்ததாகக் குறிப்பிட்டார்.
நமது வீரமிக்க படையினர் கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிட வைத்ததாகத் தெரிவித்தார்.ரசாக்கர்களின் பிடியில் இருந்து ஐதராபாத் விடுவிக்கப்பட்ட நாள் இதே நாள் என்றும், அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லப் பாய் பட்டேல் என்றும் நினைவு கூர்ந்தார்.


