
கர்நாடகம் : பெங்களூரில் உடல்நலக்குறைவால் காலமான கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார். அவருக்கு வயது 79. இந்நிலையில், பெங்களூரில் உம்மன் சாண்டி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.
புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி, அதற்காக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார். இந்த வருட தொடக்கத்தில் ஜெர்மனியில் இருந்து கேரளம் திரும்பிய அவர், பேசும் திறனையும் 90 சதவீதத்துக்கு மேல் இழந்திருந்தார். இதனால், உம்மன் சாண்டி அண்மைக் காலமாக அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் அதிகம் பங்கேற்கவில்லை.
இந்த வருடம் பிப்ரவரி மாதம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை மேலும் மோசமடைய சிறப்பு சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

