மணிப்பூர் விவகாரம் !டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

டெல்லி: மணிப்பூரில் நடந்து வரும் கொடூரத்தை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியினுடைய இளைஞர்கள் அணி சார்பாகவும், மாணவர்கள் அணி சார்பாகவும் இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் தொடங்கி இருக்க கூடிய நிலையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் விதமாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் உரிய சட்ட ரீதியான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பி.எஸ்.கோயல் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணை மிக தீவிரமாக விசாரணைக்கு உத்தரவிட பட்டிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்டமாக இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தேடும்பணியில் காவல்துறையும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என்ற விஷயங்களை வலியுறுத்தி டெல்லியில் போராட்டமானது நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *