இந்திய ராணுவ தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளுக்கு இறுதிச்சடங்கு..!

இந்திய ராணுவ தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் இறுதிச்சடங்கில்,  பாகிஸ்தானின்  ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய இராணுவத்தினர், பாக்கிஸ்தானில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள முரிட்கேயில் நடத்திய தாக்குலில், ஜமாத் உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் அப்துல் மாலிக், காலித், முதாசிர் உட்பட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், தாக்குதலில் உயிரிழந்த மூன்று தீவிரவாதிகளின்  இறுதிச் சடங்குகள் முரிட்கேயில்  பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

இதில்,பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக  பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மார்கஜி முஸ்லிம் லீக்கின் செய்தி தொடர் பாளர் தபிஸ் கய்யூம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *