
திண்டுக்கல்லில் நடைபெறுகிற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்குத் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு விழா நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து, அவர் 50 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் முதலமைச்சரின் வருகையையொட்டி 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


