
இந்திய வான் இயற்பியலாளர் மேகநாத சாகோ பிறந்த தினம்.
வான்வெளியில் அயனியாக்க சமன்பாடு என்ற புகழ் பெற்ற, பயனுள்ள சமன்பாட்டைத் தருவித்தவர். இவர் 1893 -ஆம் ஆண்டு அக்டோபர். 6-ஆம் தேதி வங்காள தேசத்தில் பிறந்தார். இவர் கண்டுபிடித்த அயனியாக்க சமன்பாட்டுக்குச் சாகோ சமன்பாடு எனப் பெயர் வைக்கப்பட்டது. இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறியவும் ஆராய்ச்சி செய்யவும் உதவுகிறது. இந்தியாவின் அறிவியல் துறையில் இவர் அமைத்த அடித்தளாம் மிக முக்கியமானது.
புகழ்பெற்ற இயற்பியலாளராக அறியப்பட்டாலும் சாகோ தீவிர சமுதாய நல நோக்குடைய சமூக ஆர்வலராகவே சிறுவயது முதற்கொண்டே இருந்தார் என்பது கூடுதல் சிறப்பு. இவர் 1956-ஆம் ஆண்டு த்ன்னுடைய 62-ஆவது வயதில் மறைந்தார்.




