TNPL 2026 : திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி.!

Advertisements
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள மைதானத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 15 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக அனுராக் ராஜேஷ் குமார் 34 ரன்களும், விமல் குமார் 30 ரன்களும் எடுத்தனர்.
இதன்மூலம், திண்டுக்கல் டிரகன்ஸ் அணி  7 விக்கெட்கள் வித்தியாசத்தில் திருப்பூரை எளிதில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *