கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா..! உயிருடன் இருக்கிறாரா..? இல்லையா.?

Advertisements

மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக போர் நீடிக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. இதற்கிடையே ஈரானில் பல ஆண்டு காலமாக தலைவராக இருந்த  அயத்துல்லாஹ் அலி கொய்ம்மணி அவருடைய குடும்பம் , ஈரானில் உயர் பதவியில் இருக்கக்கூடிய ராணுவ தலைவர்கள் என அனைவரையும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து காவு வாங்கியது…

இந்நிலையில் தற்போது ஈரானின் புதிய உச்ச தலைவராக இருக்கக்கூடிய மொஜ்தபா கமேனியின் இருப்பிடம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர் கோமாவில் இருப்பதாகவும் ஈரானை ஆட்சி செய்யும் நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது போரை ஆரம்பித்துள்ளது. இந்த மோதல் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. ஈரானில் அலி கமேனி உயிரிழந்த பிறகு அவரது மகன் மொஜ்தபா கமேனி சுப்ரீம் லீடராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், ஒரு மாதமாக அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.

இதற்கிடையே ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உடல்நிலை குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மொஜ்தபா கமேனி சுயநினைவின்றி இருப்பதாகவும் அவர் கோம் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இஸ்ரேல் உளவுத்துறையில் வேலை செய்வோர் தான் இந்த தகவல்களைக் கூறியதாகவுமே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. மேலும் ,  உளவுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “மொஜ்தபா கமேனி கோமில் தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்..
அரசு சார்ந்து எந்தவொரு முடிவுகளையும் அவர் எடுப்பதில்லை. முடிவுகளை எடுக்கும் நிலையிலும் அவர் இல்லை” என தி டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. அவர் சுப்ரீம் லீடராக பதவியேற்ற பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்பது தொடர்பாகத் தெளிவான தகவல்கள் இல்லாத சூழலில், இப்போது அவரது இருப்பிடம் குறித்து முதல்முறையாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மொஜ்தபா கமேனி புதிய சுப்ரீம் லீடராக பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இருப்பினும், அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 56 வயதான மதகுரு மொஜ்தபாவின் தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் படுகாயமடைந்த மொஜ்தபா கோமாவில் இருக்கிறார் என்றும் அரசை நடத்தவில்லை என்பதுமே உளவு துறை தகவலாக உள்ளது. இருப்பினும், ஈரான் வேறு விதமாகவே சொல்கிறது. மொஜ்கபா காயமடைந்துள்ளது உண்மை தான் என்றாலும் அவரே எல்லா பொறுப்புகளையும் கவனித்து வருவதாக ஈரான் சொல்கிறது. சமீபத்தில் தான் கமேனியின் இரண்டு அறிக்கைகள் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *