
பெரிய நாடுகள் தங்களுடைய பலத்தை மற்ற நாடுகள் மீது ஆயுதங்களாக பயன்படுத்திகின்றன என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்க அதிபர் டிரம்பை மறைமுக விமர்சித்துள்ளார்.
உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ராணுவ பலம்,பொருளாதார பலம் உள்ள பெரிய நாடுகள் வரி விதிப்பு, தடை விதிப்பது உள்ளிட்ட தங்களுடைய பலத்தை மற்ற நாடுகள் மீது ஆயுதங்களாக பயன்படுத்திகின்றன என்று அதிபர் டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்தார்.
உணவு, எரிசக்தி,பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நாடுகள் இந்த ஆழுத்தத்துக்கு ஆளாகின்றன என்றும் பலமிக்க நாடுகளின் நிர்பந்தத்துக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவாதகத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கனடா போன்ற நடுத்தர சக்தியுள்ள நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதிகார பலத்துக்கு பணிந்து விடக் கூடாது என்று கூறினார்.




