Michael Douglas: பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அமெரிக்க நடிகர்!

Advertisements

நீங்கள் சிறந்தவரின் கரங்களில் இருக்கிறீர்கள் என்றும்  பிரதமர் மோடியின் தலைமைத்துவ திறன்கள் ஆகியவற்றை அமெரிக்க நடிகர் மைக்கேல் டக்ளஸ் புகழ்ந்து பேசினார்.

பனாஜி: கோவாவில் 54-வது சர்வதேச திரைப்பட திருவிழா நடந்து வருகிறது. இதில், அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான மைக்கேல் டக்ளஸ் என்பவர் கலந்து கொண்டார்.

அவர் திரைப்பட திருவிழா மற்றும் பிரதமர் மோடியின் தலைமைத்துவ திறன்கள் ஆகியவற்றை பற்றிப் புகழ்ந்து பேசினார். அவர் கூறும்போது, இந்தத் திரைப்பட திருவிழாவில், 78 வெளிநாடுகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு உள்ளன. இதுவே, இந்த விழாவிற்கான தனித்தன்மையையும், அழகையும் காட்டுகிறது.

இது, உலகம் முழுவதும் அறியப்படுகிற மற்றும் புகழப்படுகிற உங்களுடைய இந்திய திரைப்படங்களின் வலிமையை பிரதிபலிக்கிறது. நீங்கள் சிறந்தவரின் கரங்களில் இருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்குரின் முயற்சிகளுக்கும் தன்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்து கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளாகத் திரைப்பட தயாரிப்புகள் மற்றும் அதற்கான நிதி செலவினம் ஆகியவற்றில் அதிகம் பணம் போடப்படுகிறது. அதனால், இது ஒரு வெற்றிக்கான தருணம் ஆகவும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இனம், மதம் மற்றும் பாலின வேற்றுமையின்றி மக்களைத் திரைப்படங்கள் ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *