கனிமொழி – சபரீசன் திடீர் மோதல்..மருத்துவமனையில் துரைமுருகன்.!

Advertisements
திமுக தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருமகன் சபரீஷனுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டு இருக்கிறது . இந்த மோதல் எதனால் ஏற்பட்டது என்ற பின்னணி தகவல் தெரியாத சூழ்நிலையில் தென் மண்டல திமுக முழுவதும் தற்பொழுது பர பரப்பில் ஆழ்ந்திருக்கிறது .
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் தற்பொழுது தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கனிமொழி எம்பி தென் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் .
இவர் , தற்பொழுது தூத்துக்குடி,  திருநெல்வேலி , தென்காசி ஆகிய மாவட்டங்கள் முழுவதும் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு கட்சியின் உள்குத்து விவகாரங்களுக்கு முடிவு கொண்டு வருகிறார். இது மட்டுமல்லாமல் பூத் ஏஜெண்டுகள் வரை அனைத்து பணிகளையும் இரவு பகலாக செய்து வருகிறார் .
தென் மண்டலத்தை பொருத்தவரையில் தற்பொழுது கனிமொழி தலைமை தாங்குவதால் திமுக தொண்டர்கள் அனைவரும் அவரது தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள் . தங்களுடைய பிரச்சனைகளை அவரிடம் தெரிவித்து தீர்வு கண்டு வருகிறார்கள் .
இது தொடர்பாக அவரும் தொகுதிவாரியாக கூட்டங்கள் நடத்தி கட்சியை பலப்படுத்தி வருகிறார் .
இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருமகனான சபரீசன் தற்பொழுது  தென் மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் . அவரும் தனியாக தொகுதிவாரியாக கூட்டங்கள் போட்டு நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார் . அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார் மேலும் அவர்களுக்கு வழிகாட்டி போல் சில ஆலோசனைகளையும் தெரிவித்து வருகிறார் .
ஏற்கனவே , கனிமொழி தலைமையில் , தென் மண்டல திமுக இயங்கி வரும் நிலையில் திடீரென சபரீசன் எதற்காக இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார் என்பது மிகப்பெரிய கேள்வி குறியாக பார்க்கப்படுகிறது . இதன் மூலம்,  தற்பொழுது தென் மண்டல திமுகவினர் மிகப்பெரிய குழப்ப சூழ்நிலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் கனிமொழியின் செயல்பாடுகளில் சபரீசன் தலையிடுவதை விரும்பவில்லை , மேலும் சபரீசன் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தென் மண்டல திமுகவில் மீண்டும் குழப்பங்கள் ஏற்படும் என்கிறார்கள் ,
இருந்த போதிலும் , இதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை மு க ஸ்டாலின் அனுமதி இல்லாமல் சபரிசன் எப்படி இந்த சுற்றுப்பயணத்தையும் ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  இதனிடையே கூட்டணி விவகாரத்தில் வைகோ பால்சாமி தலைமையிலான மதிமுகவிற்கு 12 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதிவையும் கேட்டு போர்க்கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மதிமுகவை பொறுத்தவரையில் கடந்த தேர்தலில் , திமுக தரப்பில் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . இதற்கிடையே பாரிவேந்தரின் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியில் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்தவர் லீமா ரோஸ். இவர் தற்பொழுது அந்த கட்சியை விட்டு விலகி இருக்கிறார் . லீமாரோஸ் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது .
இது மட்டுமல்லாமல் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான சென்னை தேனாம்பேட்டை கட்டிடத்தில் தான் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது . ஆதவ் அர்ஜுனாவின் தனியார் நிறுவனமும் அங்கு தான் செயல்பட்டு வந்தது . தற்பொழுது திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட உள்ள அழுத்தம் காரணமாக லாட்டரி அதிபர் மார்ட்டின் தேனாம்பேட்டை அலுவலகங்களை காலி செய்யும்படி தமிழக வெற்றி கழகத்திற்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் உத்தரவிட்டதாக தெரிகிறது .
இதனைத் தொடர்ந்து  , தேனாம்பேட்டையில்இயங்கி வந்த தமிழக வெற்றிக்கழக அலுவலகம் இம் மாற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே திமுக அமைச்சர் துரைமுருகன் உடல் நலம் குன்றிய நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவரை முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து இருக்கிறார் . தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது ..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *