மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க கூடாது!ஒன்றியஅமைச்சர் கஜேந்திர செகாவத்துடன்அமைச்சர் துரைமுருகன் சந்தித்துவலியுறுத்தல் !

Advertisements

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்துடன் அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்தார்.காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளை அவரிடம் அமைச்சர் துரைமுருகன் முன்வைத்தார்.

கடந்த 2 வாரங்களுக்கு ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். ஜூன் ஜூலை மாதங்களுக்கான வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினார்.மேலும் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க கூடாது எனவும் ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *