1000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது!

Advertisements

கோவை: கோவையில் 1000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்.கோவையில் போதை மாத்திரை, கஞ்சா, புகையிலை பொருட்களை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நஞ்சுண்டாபுரத்தில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வாலிபர்கள், கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று போலீசார் நஞ்சுண்டாபுரத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பேக்கரியின் பின்புறம் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் குவியல், குவியலாக போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்துள்ளனர்.

இதனை வாங்கிய சில வாலிபர்கள் மாத்திரைகளை நீரில் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏற்றி வந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட போத்தனூரை சேர்ந்த இம்ரான்கான் (26), முகமது யூசுப்(25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1041 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *