உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 ஆவது சுற்றுப் போட்டியில் செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 ஆவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், பெல்ஜியம் மற்றும் செனகல் அணிகள் மோதின.
இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் பெல்ஜியம் அணி அடுத்தச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியது.




