K. R. Periyakaruppan: ரூ.1,500 கோடி வட்டியில்லா கடன்!

Advertisements

வட்டியில்லா கடன், 2023-24ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடிவரை வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகள்மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இந்த வட்டியில்லா கடன், 2023-24ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடிவரை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாகப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வேளாண் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளும் கூட்டுறவு வங்கிகளை அணுகி பயன் பெறலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்கள் தோறும் இருக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், ஆடு, மாடு, கோழி, மீன்கள் போன்றவற்றை வளர்க்கும் விவசாயிகள், தங்களுடைய ஆதார் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பித்து கடன் பெற்றுக்கொள்ளலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல்டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும்டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *