தனிச் சின்னத்தில் தான் போட்டி..!

Advertisements

வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அவர்களுடைய கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது தேமுதிக -திமுக கூட்டணியில் இணைந்து பல டிமாண்டுகளையும் வைத்து வருகிறது…இந்த தேர்தலை பொறுத்தவரைக்கும் திமுக , அவர்களுடைய கூட்டணிக்கு எந்த கட்சிகள் வந்தலு.

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய மதிமுக, தனித்து போட்டி என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கியது, தேமுதிகவை கூட்டணிக்குள் இழுத்தது போன்ற நகர்வுகளால் திமுக களத்தில் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. திமுக – மதிமுக இடையே அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக பேச்சுவார்த்தை குழுவினருடன், மதிமுக பேச்சுவார்த்தை குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில், மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போது திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டனர். மதிமுக சார்பில் கூடுதல் தொகுதிகளுடன் தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். திமுக சார்பில் இந்த முறையும் மதிமுகவை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வலியுறுத்தி வருகிறார்கள்.

ஒருவேளை மதிமுக தனி சின்னத்தில் போட்டி என்பது முடிவு செய்யப்பட்டால் கடந்த முறை போட்டியிட்டதை விட குறைவான தொகுதிகள் தான் அவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளது.

மதிமுக அவை தலைவர் அர்ஜுன ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டியிடும். எவ்வளவு தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறோம் என்பதை பின்னர் அறிவிக்கிறோம். திமுகவிடம் ஒரு மாநிலங்களவை தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்கவும் கேட்டு கோரிக்கை வைத்துள்ளோம்.

இப்போது முதல் கட்ட பேச்சுவார்த்தை தான் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து திமுக அழைத்தவுடன் வருவோம். நாங்கள் இன்னும் மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை வழங்கவில்லை. மதிமுக எங்கள் சின்னத்தில் தனியாக நிற்கும் என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றவற்றை இறுதியானதும் சொல்கிறேன்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *