
கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் பெயிண்டர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் மேல காலனியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் , பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் , கீழ காலனி என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் . இந்நிலையில் மாடியிலிருந்து ரோலர் மூலம் கீழ்நோக்கி பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த போது ஜெய்சங்கர் திடீரென அந்த ரோலரை தூக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த ரோலர் மீது மேலே செல்லும் உயர்அழுத்த மின்சார ஒயர் உரசியதில் மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். உடனே, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் , இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



