பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்த குடியரசு தலைவர்.!

பக்ரீத் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில், பக்ரீத் திருநாளை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்திருநாள் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் பலிதானத்தின் அடையாளமாகும்.
இந்தத் பண்டிகை நமக்கு மனிதநேயத்துடன், குறிப்பாக நலிவடைந்த பிரிவினருக்குச் சேவை செய்வதற்கான ஊக்கத்தை அளிப்பதாகக் கூறினார். இந்த இனிய நாளில், சமூகத்தில் அன்பையும் நல்லிணக்கத்தையும் பரப்புவதற்குக் கூடுதல் அர்ப்பணிப்புடன் நாம் முன்னோக்கிச் செல்வோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *