Advertisements

வருகிற மார்ச் மாதம் 1ஆம் தேதி பிரதமர் மோடி மதுரை வருகிறார் இதனை ஒட்டி அதிமுக பாஜக இடையிலான தொகுதி பங்கீடு சண்டை விவகாரம் முடிவுக்கு வருகிறது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அந்த வகையில் பாஜக தரப்பில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போர் குரல் எழுப்பி வருகின்றனர்.கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டது மேலும் கூட்டணி கட்சிகள் 12 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டன இதில் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளிலும் போட்டி விட்டன.
இந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு 50 தொகுதிகளுக்கும் மேல் ஒதுக்க வேண்டுமென அதிமுகவிடம் பாஜக கோரிக்கை வைத்திருக்கிறது.ஆனால் இதற்கு அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியும்கூட அதிமுக பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து சரியான முடிவு எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே புதிதாக கூட்டணி சேர்ந்திருக்கும் டிடிவி தினகரன் தலைமையினான அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தனக்கு கூடுதல் தொகுதியை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஏராளமான சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில் தற்போது அதற்கு முடிவு ஏற்பட்டிருக்கிறது.
தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தரப்பிலும் பாஜக தரப்பிலும் டெல்லி பாஜக மேலிடம் பேசியிருக்கிறது இதன் மூலம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு இறுதியாக 40 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.இது தொடர்பாக ஏற்கனவே பேசி முடிவெடுத்து விட்ட நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வருகிற 26 ஆம் தேதி சென்னை வருகிறார் இவர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் இந்த கூட்டத்தில் அதிமுக பாஜக பாமக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள் இறுதிச் செய்யப்படுகின்றன.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தற்பொழுது மூன்றாவது முறையாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்னை வருகிறார் இதில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட டிடிவி தினகரன் நைனார் நாகேந்திரன் அண்ணாமலை ஜிகே வாசன் அன்புமணி உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.இவர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி இறுதிக்கட்ட தொகுதி பங்கீட்டை முடிவு செய்கிறார்கள்.
வருகிற மார்ச் மாதம் 1ஆம் தேதி பிரதமர் மோடி மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அப்பொழுது அதிமுக தரப்பில் அனைத்து கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப் போவதாக தெரிகிறது.
பிரதமர் மோடி பங்கேற்பும் மேடையில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்க பாஜக திட்டமிட்டு இருக்கிறது. எனவே தற்பொழுது அதிமுக தரப்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு முடிவு எடுக்கப்பட்டுவிட்டது வருகிற மார்ச் மாதம் 1ஆம் தேதி 2 அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
Advertisements



