வாழ்க்கை அரசியல் நடத்துபவர் முதல்வர்..!

Advertisements

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு அரசியலை நடத்தவில்லை, வாழ்க்கை அரசியலை நடத்தி வருவதோடு,  மனிதாபிமானத்தோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும். விழுப்புரத்தில் சுகாதார துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூபாய் 4 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில், புதியதாக அமைக்கப்பட்டுள்ள,  சிறப்பு கட்டணத்துடன் கூடிய படுக்கை வசதி, மன நல பாதிப்பு சிகிச்சை மையத்தினை, சுகாதாரத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

விழாவில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், பொன்முடி, அன்னியூர் சிவா, முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செஞ்சி மஸ்தான் ஆட்சியர் ஷேக் அப்துல்-ரஹ்மான் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவில், தமிழக சுகாதார துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் பேசினார்.

அப்போது, கொரனோவிற்கு பிறகு அரசு மருத்துவமனையை பயன்படுத்துவது அதிகாரித்துள்ளதாகவும், இன்றைக்கு  7 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு மருத்துவ சேவையை தினந்தோறும் பயன்படுத்தி வருவதாகவும், ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று இரண்டு மடங்கு அரசு மருத்துவ சேவையை பொதுமக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுகிற ஆட்சியாக தமிழக அரசு உள்ளதாகவும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு அரசியலை நடத்தவில்லை வாழ்க்கை அரசியலை நடத்தி வருவதாகவும், மனிதாபிமானத்தோடு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  தமிழகத்தில் இன்றைக்கு 8-ஆயிரத்து 713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளதாகவும், திமுக ஆட்சியில் 50 இடங்களில் நகர்புற சுகாதார நிலையங்கள் திறக்கபட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *