ஈரானின் தாக்குதல் இறையாண்மையை வெளிப்படையாக மீறியுள்ளது என்று கத்தார் அமைச்சர் கண்டனம்

கத்தாரின் மீதான ஈரானின் தாக்குதல் இறையாண்மை மற்றும் வான்வெளியை வெளிப்படையாக மீறியுள்ளதாக கத்தாரின் வெளிவிவகார துறை அமைச்சர் அல் முரைகி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஈரான் இடையேயான போரில், அமெரிக்கா களமிறங்கியதை அடுத்து, ஈரானின் அணு உலைகள் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இதனால், அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் எச்சரிக்கை விடுத்து தாக்குதலை தீவிரபடுத்தியது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் படைகள் நிறுத்தப்பட்ட நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கியது.

இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் படைகள் நிறுத்தப்பட்ட கத்தார் நாட்டின் மீது குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஈரான் செயலுக்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கத்தார் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கத்தாரின் இறையாண்மை மற்றும் வான்வெளியை வெளிப்படையாக மீறியதற்கு  ஈரானை கடுமையாக சாடியுள்ளது. மேலும் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. ஆவண விதிகளையும் இந்த தாக்குதல் மீறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச விதிகளின்படி, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் உரிமை கத்தாருக்கு உள்ளது என ஈரான்  தெரிவித்ததால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உள்ளது. மேலும், ஈரானிய தூதரை கத்தாரின் வெளிவிவகார துறை அமைச்சர் சந்தித்து, இந்த தாக்குதல் தொடர்பாக தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடத்த  ஈரானுக்கு தேவை உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *