Advertisements

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
கொல்கத்தாவின் ஈர்டன் காடன் மைதானத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
இதில், தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் தலைமையிலான வீரர்களும், நியூசிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர். எனவே, இன்றையப் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற மல்லுகட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
Advertisements



