Marakkanam:2 கன்றுகள் ஈன்ற பசுமாடு!

மரக்காணம்:விழுப்புரம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன். விவசாயி. இவரது விவசாய தோட்டத்தில் பசு மாடுகள் வளர்க்கிறார். அதில் ஒரு பசுமாடு சினையாக இருந்தது. இந்நிலையில், நேற்று அந்த மாடு அடுத்தடுத்து இரண்டு கன்றுக்குட்டிகளை ஈன்றது.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் பசுமாடு மற்றும் 2 கன்றுக்குட்டிகளை பார்வையிட்டுச் சென்றனர். பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.

கலப்பின மாடுகளுக்கு, செயற்கை கருத்தரிப்பு முறை கையாளப்படுகிறது. செயற்கை கருத்தரிப்பில் சினை பிடித்த பசுமாடு, 2 கன்றுகள் ஈன்றுவது அடிக்கடி நடக்கிறது. பசுவையும், கன்றுகளையும் நன்கு பராமரிக்க மரக்காணம் கால்நடைத் துறையின் ஆலோசனைகள் தேவைப்படுவதாகவும் அவர்கள் நேரில் பார்வையிடவும் விவசாயி கதிரவன் கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *